வியாழன், 27 செப்டம்பர், 2012

கணக்கீட்டுப் பிரிவு கலந்தாய்வு


கணக்கீட்டுப் பிரிவு ஊழியர்கள்

கலந்தாய்வு கூட்ட அழைப்பிதழ்

நாள்: 07.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி
இடம்: பாலாஜி திருமண மண்டபம், கல்பனா தியேட்டர் பின்புறம், உடுமலைப் பேட்டை.


சிறப்புரை : தோழர் D. கோவிந்தராஜ்
அட்டைப்பட்டியல் குழு கன்வீனர், மாநில பொருளாளர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, சென்னை.

  • முத்தரப்பு ஒப்பந்த்ததிற்கு எதிராக கணக்கீட்டுப்பிரிவு ஊழியர்களுக்கு பொறுப்புகள், கடமைகள் என உத்திரவிடப்பட்டுள்ளதை ரத்து செய்திட வேண்டுதல்
  • கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை அகற்றி சமவேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் கணக்கீட்டாளர் சம்பளம் பணியில் சேர்ந்த நாள் முதல் வழங்கிட.
  • பணிக்காலத்தில் மூன்று பதவி உயர்வு உத்திரவாதப்படுத்துதல்.
  • கணக்கு பிரிவில் உள்ளதைப்போல் கணக்கீட்டு பிரிவிலும் எட்டு அடுக்கு பதவி உயர்வு வாய்ப்பினை உருவாக்க வேண்டுதல்.
  • வசூல் பணியில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்தல்.
  • கணக்கீட்டு பிரிவில் கணிணிகள் அச்சு இயந்திரங்கள் பழுதடையாமல் இருக்கவும், மேலும் இணையதள சேவைகள் தடைபடாமல் இருக்கவும் உத்திரவாதப்படுத்துதல்.
  • 1982-ல் பணியில் சேர்ந்த கணக்கீட்டாளருக்கு 18 மாதப் பணிக்காலம் மொத்தப் பணியுடன் சேர்த்து கணக்கிட்டு அனைத்து பலன்களை வழங்குதல்.
  • கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள் பதவி உயர்வுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் பதவி உயர்வு வழங்குவது.
  • தற்காலிக பணியிட மாற்றம் என்று பிற பிரிவு அலுவலகங்களுக்கு பணிக்கு அனுப்புவதை தவிர்த்திட
  • உடைந்துபோன இருக்கைகள் மாற்றி புதிய இருக்கைகள் வழங்க வலியுறுத்தல்
  • மதிப்பீட்டாய்வாளர் வருவாய் மேற்பார்வையாளர்களை கணக்கீடு, வசூல் பணி செய்ய நிர்ப்பந்திப்படை தவிர்த்திடுதல்.
  • 5வருடம் முடித்த்த கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை ஊழியார்களுக்கு பதவி உயர்வு வழங்கிடல்
  • பணிநிலை I ல் நிலையில் முதுநிலை மதிப்பீட்டு அலுவலர் பதவி உருவாக்கிட
     மேற்குறிப்பிட்ட பொருள் குறித்து விவாதிக்க கணக்கீட்டுப்பிரிவு ஊழியர்கள் சங்க வித்தியாசமின்றி இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 
உடுமலைப் பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்