ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

உடுமலை கோட்ட சுற்றறிக்கை1

         கடந்த 15.09.2012 சனிக்கிழமை உடுமலை மின்வாரிய வளாகத்தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் கோட்டமட்ட கூட்டம் நடைபெற்றது. தோழர் A.பூபதி இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தோழர்கள் சிவதாணு, பாலசுப்பிரமணியன், ஜெகானந்தா, இராமலிங்கம், கோவிந்தசாமி, மயில்சாமி, சின்னச்சாமி, அம்மாசை, அமிர்தவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தோழர் பாலசுப்பிரமணியன், மத்திய அமைப்பின் 14வது மாநில மாநாடு கோவையில் 2012 டிசம்பர் 15, 16, 17 தேதிகளில் நடைபெறுவது பற்றியும் அததில் உடுமலை கிளையின் செயல்பாடுகள் பற்றியும், மாநாட்டிற்கான நிதி, பேரணியில் பங்கேற்பு, ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களை விளக்கிப் பேசினார். அதன் பின்னர் தோழர்கள் அனைரும் விவாதித்ததின் பேரில் கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டது. முடிவுகள் ஏகமனதாக ஏற்கப்பட்டது. தோழர்கள் R. பாலசுப்பிரமணியன், சின்னச்சாமி, பூபதி இராமகிருஷ்ணன் தலா ரூ.5000/- மாநாடு நன்கொடையாக அளித்திட ஒப்புதல் அளித்தனர். தோழர் சிவதாணு ரூ.3000/-ம், தோழர் ஜெகானந்தா, ரூ.2000/-ம் மாநாட்டு நன்கொடை அளித்திட ஒப்புதல் அளித்தனர். நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் பூபதி ராமகிருஷ்ணன், சுவர் விளம்பரச் செலவு ஏற்பதாக தெரிவித்தார். இதைத்தவிர தங்களால் முடிந்த அளவு காய்கறி, தேங்காய் போன்ற பொருட்கள் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தனர். கூட்டத்தின் முடிவிவல் நிரந்தர உறுப்பினர் ஒருவருக்கு மாநாட்டு நன்கொடையாக குறைந்த பட்சம் ரூ.1000/- வசூலிக்க வேண்டும் எனவும் அதை செப்டம்பர் மாத சம்பளத்தில் வசூலித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஊதிய உயர்வு பிரச்சாரம் செப்டம்பர் 26, 27 தேதிகளில் நடத்திடும் போதே நிதி வசூலும் செய்திட முடி வெடுக்கப்பட்டது. தோழர்கள் செப்டம்பர் 26, 27 தேதிகளில் விடுப்பு எடுத்து பிரச்சாரத்தில் கலந்து கொள்வது எனவும் ஆர்வம் மிக்க முன்னணி ஊழியர்களை ஈடுபடுத்திடவும் முடிவெடுக்கப்பட்டது. பிரச்சாரப் பயணவிபரம் கீழ்கண்டவாறு

26.09.2012 புதன் கிழமை

             காலை 8 மணி மத்திய அலுவலகம், உடுமலையில் இருந்து துவக்கம்,
             மின்வாரிய வளாகம், பண்டகசாலை, சிறப்பு பராமரிப்பு, மின்அளிவி
             பழுதுபார்பகம், 110 கிவோ. துணை மின் நிலையம் , உடுமலை.

26.09.2012  காலை 11 மணி 110 கிவோ. துணை மின் நிலையம், பாலப்பம்பட்டி,
             லைன்ஸ், 230 கிவோ. துணை மின் நிலையம்.
             காலை 11:00 மணி மைவாடி
             காலை 12:00 மணி துங்காவி
             மதியம் 12:00 மணி பூளவாடி
             மதியம் 02:00 மணி குடிமங்கலம்
======================================================================

27.09.2012 வியாழன்

             காலை 7.30 மணிக்கு மத்திய அலுவலகத்தில் இருந்து புறப்படுதல்
             காலை 8.00 மணி பூலாங்கிணறு.
             காலை 8.30 மணி கோமங்கலம்
             காலை 9.00 மணி வாளவாடி
             காலை 10.00 மணி வாளவாடி
             காலை 10.30 தளி
             காலை 11.00 மானுப்பட்டி
             காலை 12.00 கொமரலிங்கம்
             காலை 12.30 மடத்துக்குளம்
             காலை 01.00 கணியூர்
=======================================================================
இதைத் தவிர பகுதி நேரப்பணியாளர்கள் தலா ரூ.300/- மாநாட்டு நிதியாக அளித்திட முடிவெடுக்கப்பட்டது. மேலும் மாநாட்டுக்கான கொடி வரவேற்பு, தியாகிகள் ஜோதி போன்ற நிகழ்விலும் திரளாக கலந்திட முடிவு செய்யப்பட்டது.

                                                   புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்
                                                                                      தோழமையுள்ள
     
                                                                                        சி. ஜெகானந்தா
                                                                                   கோட்டச் செயலாளர்
 ========================================================================
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் dnsecretaryudt@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்